நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் புதிய திருத்தேர் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது : வெள்ளோட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்

Jan 20 2017 10:06AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில், புதிய திருத்தேர் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தைஎட்டியுள்ள நிலையில், வெள்ளோட்டத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற மாசிமக தேரோட்டத்தின்போது, தேர் அச்சு முறிந்தது. இதனையடுத்து மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்தபடி, அரசு மற்றும் பொதுமக்களின் நன்கொடை மூலம் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தேர் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்போது, தேர்ப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேரோட்டம் நடைபெறும் பகுதிகளில் சாலை செப்பனிடும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், தேர்ப்பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் திரு. ஓ.எஸ். மணியன், வரும் 2-ம் தேதி திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனிடையே, தூத்துக்குடி மாநகர மக்களுக்கு தட்டுப்பாடின்றி சீரான குடிநீர் வழங்கும் வகையில், மணிமுத்தாறு, பாபநாசம் அணையில் இருந்து 325 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு, அதன்மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 30 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகளை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00