தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப் படங்களை மலர்களால் அலங்கரித்தும், அமைதிப் பேரணிகள் நடத்தியும், பொதுமக்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி : தாயை இழந்த தமிழகம் துயரமே உருவாக காட்சியளிக்கிறது - முதலமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணிலடங்கா மக்கள்நலத் திட்டங்களை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து, அனைத்து தரப்பு மக்களும் உருக்கம்

Dec 7 2016 9:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மறைவால், தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. பல்வேறு பகுதிகளிலும், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படங்களை மலர் மாலைகளால் அலங்கரித்தும், அமைதிப் பேரணி நடத்தியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகர அ.இ.அ.தி.மு.க. சார்பில், மவுன ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், திரளான கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர். ஏராளமான கழகத் தொண்டர்கள் மொட்டையடித்து தங்களது சோகத்தை வெளிப்படுத்தினர்.

நாகை மாவட்டம் விழுந்தமாவடியில், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற மவுன ஊர்வலம் நடைபெற்றது. 4 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற ஊர்வலத்தின் முடிவில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கழகத்தினர் மற்றும் கிராம மக்களும், மீனவர்களும் கலந்துகொண்டனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மறைவையொட்டி, வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் காந்தி பூங்கா அருகே வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்களைத் தூவி, ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி கதறி அழுதனர்.

திருவிடைமருதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்புவனத்தில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகள், நெசவாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. ஜக்கம்பட்டியில் இருந்து வைகை அணை பிரிவு, பேருந்து நிலையம் வழியாகச் சென்ற ஊர்வலம், கொண்டமநாயக்கன்பட்டியில் நிறைவுபெற்றது. அ.இ.அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பெரியகுளத்தில் ஆயிரக்கணக்கான கழகத்தினர் மற்றும் பொதுமக்கள், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துடன் மவுன ஊர்வலம் நடத்தினர். புதிய பேருந்து நிலையம், ஃபாரஸ்ட் ரோடு, அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பாலம் உள்ளிட்ட வீதிகள் வழியாகச் சென்று காந்திசிலை அருகே அமைதிப் பேரணி நிறைவுபெற்றது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், நரிக்குறவ மக்கள், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்தின் முன்பு கதறி அழுதனர். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஊழியர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

காரைக்குடியில், சர்வ கட்சியினர் இணைந்து அமைதிப் பேரணி நடத்தினர். அண்ணா சிலை அருகில் இருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. பேரணியின் முடிவில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில், கழகத் தொண்டர்கள் மொட்டையடித்துக் கொண்டு தங்கள் சோகத்தை வெளிப்படுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மீளாத்துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பெண்கள், கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

ராமேஸ்வரத்தில் பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற மவுன ஊர்வலம் நடைபெற்றது. பெருந்திரளானோர் பங்கேற்று, மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தங்கச்சிமடத்தில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. மீனவ சமுதாய மக்களை கண்போல் காத்தவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா என, பேரணியில் பங்கேற்ற மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்கள் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, கோவையில் பல்வேறு இடங்களில் கழகத்தினர், மற்றும் பெண்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். சவுரிபாளையம் பகுதியில் அ.இ.அ.தி.மு.க.வினர் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர்.

காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில், பூ வியாபாரிகள், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவத்தை, பூக்களால் வரைந்து அஞ்சலி செலுத்தினர். திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் கழகத்தினர், எம்.ஜி.ஆர். சிலை வரை மவுன ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், பொதுமக்கள், கழகத் தொண்டர்கள் மவுன ஊர்வலம் நடத்தினர். ஏராளமானோர் மொட்டையடித்துக் கொண்டனர். வெள்ளோடு, ஆலமரத்துப்பட்டி, தோமையார்புரம், தாடிக்கொம்பு உள்ளிட்ட இடங்களில், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தலைவாசல் தெற்கு ஒன்றியம் கோவிந்தம்பாளையம் கிராம மக்கள், அங்குள்ள பேருந்து நிலையத்தில், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்தை வைத்து பெண்கள் உட்பட ஏராளமானோர் கதறி அழுதனர். மேலும் பலர் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர்.

கெங்கவல்லி அடுத்த ஆணையம்பட்டியில், கழகத்தொண்டர்கள், பொதுமக்கள் மவுன ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ஆத்தூர் பகுதியில் கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே இட்டேரி கிராமத்தில் ஏராளமானோர் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர். மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் அடுத்த ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சீவல்சரகு, வக்கம்பட்டி பகுதி மக்கள், ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்தினர். பலர் மொட்டையடித்து தங்கள் சோகத்தை வெளிப்படுத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தருமபுரி மாவட்டக்கழகம் சார்பில், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கழகத்தினர், மகளிர் அணியினர், மதிகோண்பாளையத்தில் இருந்து நான்கு ரோடு வரை, அமைதி ஊர்வலம் நடத்தினர்.

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்தை ஏந்தி மவுன ஊர்வலமாகச் சென்று, தரங்கம்பாடி கடற்கரையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆக்கூர், பொறையார் உள்ளிட்ட பகுதிகளிலும் மவுன ஊர்வலம் நடைபெற்றது.

தஞ்சையில், பொதுமக்கள், கழகத்தொண்டர்கள், புகைப்படக்கலைஞர்கள், மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் உள்ளிட்டோர் மவுன ஊர்வலம் நடத்தினர்.

திருச்சி துவாக்குடி நகரக்கழகம் சார்பில், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மவுன ஊர்வலமும் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், அ.இ.அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கடலூர் மாவட்ட வழக்கறிஞர்கள், நீதிமன்ற வளாகத்தில், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

கடலூரில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படம் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சியில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு, மாநகராட்சி ஆணையர், ஊழியர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறை வேதசிவாகம பாடசாலையில், திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று வேதபாராயணம் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில், பொதுமக்கள், அனைத்துக்கட்சியினர், அனைத்து வியாபாரிகள் சங்கம், அனைத்து தொழிலாளர்கள் சங்கம், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர் ஆயிரம் பேர் கலந்துகொண்ட மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. அண்ணாசிலை முன்பு தொடங்கிய இந்த ஊர்வலம், ஈரோடுசாலை, சென்னிமலை சாலை, பேருந்து நிலையம், கடைவீதி வழியாகச் சென்றது. பின்னர், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கரூர் மாவட்டம், கரூர் நகர 24-வது வார்டு அ.இ.அ.தி.மு.க சார்பில், ஆண்கள் மற்றும் பெண்கள் முடி காணிக்கை செலுத்தினர். விளக்கேற்றி, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட மின்வாரிய தலைமை அலுவலகத்தில், பொறியாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி, மவுன அஞ்சலி செலுத்தினர்.

கோபிசெட்டிபாளையம் பகுதியில், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு பெண்கள் மாலை அணிவித்து கதறி அழுதனர். அண்ணா தொழிற்சங்கம் மற்றும் அனைத்து ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் முன்பு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில், சிங்காநல்லூர் அடுத்த மசகாளிபாளையம் பகுதியில், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. கழகத் தொண்டர்கள் மொட்டையடித்து, தங்கள் சோகத்தை வெளிப்படுத்தினர்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்டோர், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக அலுவலகம் முன்பு, அவரது திருவுருவப் படத்தை வைத்து தீபம் ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மதுரை மாவட்டத்தில், எஸ். தரைக்குடி, செவல்பட்டி ஆகிய கிராமங்களில், முதலமைச்சருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அமைதி ஊர்வலம் நடைபெற்றது. திருமங்கலம், அனுப்பானடி உள்ளிட்ட பகுதிகளில் கழகத் தொண்டர்கள் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, திருப்பூர் மர்றும் பெரிச்சிபாளையம் பகுதியில் கழகத் தொண்டர்கள் மவுன அஞ்சலி செலுத்தி, அவரது திருஉருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

ஈரோடு மாநகர் மாவட்டம், 30-ஆவது வார்டு கழகம் சார்பில், கழகத் தொண்டர்கள் 50 பேர் மொட்டையடித்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஒன்றியப்பகுதியில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர்.

உதகையில் காபி ஹவுஸ் பகுதியில், கழக நிர்வாகிகளும், பொது மக்களும் இணைந்து முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்குமவுன அஞ்சலி செலுத்தினர். வணிகர் சங்கம் சார்பில், மார்கெட் பகுதியில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திருவுருப்படம் வைக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தொகுதி குடிமங்கலம் ஒன்றிய கழகம் சார்பில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏராளமானோர் மொட்டை அடித்து தங்களின் அனுதாபங்களை வெளிப்படுத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், படப்பை, மாங்காடு, கல்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பெருந்திரளான பொது மக்கள் மெளன அஞ்சலி மற்றும் மவுன ஊர்வலம் நடத்தி, தங்களது சோகத்தை வெளிப்படுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரக் கழகம் சார்பில், சண்முகாநதியில் கழகத் தொண்டர்கள் மொட்டையடித்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திருஉருப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

நாகூரில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற நாகூர் தர்க்காவில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடயை வேண்டி சிறப்பு பாத்தியா ஓதப்பட்டது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் சார்பில், அவரது திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவை கிணத்துக்கடவு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மவுன ஊர்வலம் நடத்தினர். கழகத் தொண்டர்கள் மொட்டையடித்து முதலமைச்சருக்கு அஞ்சலி செலுத்தினர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மறைவுக்கு, திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, திருஉருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மெழுகுவர்த்தி ஏந்தி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாகப்பட்டிணம் மாவட்டம், தெற்கு பொய்கை நல்லூர் மற்றும் பூவைத்தேடி கழக நிர்வாகிகள், பொது மக்கள் சார்பில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 3 கிலோ மீட்டர் தூரம் மவுன ஊர்வலம் சென்று, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வேதசிவகாம பாடசாலையில், 50-க்கும் மேற்பட்ட வேதம் படித்த மாணவர்கள் பங்கேற்று, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆன்மா சாந்தியடைய வேண்டி வேதபராயணம் செய்தனர்.

திருவள்ளூர் மேற்குமாவட்டம், கும்மிடிப்பூண்டியில், கழக நிர்வாகிகள், அனைத்து கட்சியினர், வணிகர்கள் மற்றும் திரளான பொதுமக்கள், அமைதி ஊர்வலம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு, மலர்கள் தூவி, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பெரியபாளையத்தில், அ.இ.அ.திமு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், ஊர்வலமாகச் சென்று, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மாலைகள் அணிவித்தும், மலர்கள் தூவியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

திருவாரூர் ஒன்றியக் கழகம் சார்பில் திருவாதிரைமங்களம் பகுதியில், கழக நிர்வாகிகள், பொதுமக்கள், முக்கிய வீதிகள் வழியாக மவுன ஊர்வலம் சென்றனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

கடலூரில், தமிழக ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை நடத்தினர்.

கோவை மண்டல போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில், கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள, அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு வைக்கப்பட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு, கருப்பு சட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்த போக்குவரத்து தொழிலாளர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து மவுன அஞ்சலி நடைபெற்றது.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில், கோவை கவுண்டம்பாளையம் அம்மன்கோவில் பகுதியில், தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது, இதனைதொடர்ந்து, அப்பகுதியிலிருந்து பேருந்து நிலையம் வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது.

இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்கு கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00