முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு, இலங்கை அதிபர் சிரிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆழ்ந்த இரங்கல் : இலங்கை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், இரங்கல் கடிதத்தை தமிழக ஆளுநரிடம் நேரில் வழங்கினர் - முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு ஜெர்மனி அரசு இரங்கல்

Dec 7 2016 9:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மறைவுக்கு, இலங்கை அதிபர் சிரிசேனா மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இரங்கல் கடிதத்தை தமிழக ஆளுநரிடம் இலங்கை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் இன்று நேரில் அளித்தனர்.

முதலமைச்சர் செல்விஜெயலலிதா மறைவுக்கு, இலங்கை அதிபர் சிரிசேனா மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆறுமுகம் தொண்டமான், இலங்கையின் உவா மாகாண பொறுப்பு முதலமைச்சர் திரு. செந்தில் தொண்டமான், மத்திய மாகாண சபையின் வேளாண்துறை அமைச்சர் திரு. எம். ராமேஸ்வரன், இலங்கை துணைத் தூதர் திரு. V. கிருஷ்ணமூர்த்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பின் துணைத் தலைவர் திரு. கணேசமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழுவினர், இலங்கை அதிபர் மற்றும் பிரதமரின் இரங்கல் செய்தியை, தமிழக ஆளுநர் திரு. வித்யாசாகர் ராவிடம் இன்று நேரில் அளித்தனர்.

இலங்கை அதிபர் சிரிசேனா அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மறைவு குறித்த செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்ததாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, மக்களின் நல்வாழ்வுக்காக தமது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்தவர் - மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மதிப்பிற்குரிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இந்திய அரசியலில் மிக முக்கியமானவர், தமிழக முதலமைச்சராக 6 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் சிரிசேனா தெரிவித்துள்ளார்.

இந்தியா மிகப்பெரிய பெண் அரசியல் தலைவரை இழந்து விட்டது - ஏழை மக்களுக்கு உண்மையான தலைவராக திகழ்ந்த அவர், "அம்மா" என மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். வேதனையான இத்தருணத்தில், தமிழக மக்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்வதாகவும் அதிபர் சிரிசேனா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், தமிழக மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவரும், மக்களின் நலனை முன்னிறுத்தியவரும், சிறந்த அரசியல் தலைவராகவும், திகழ்ந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்கு இலங்கை அஞ்சலி செலுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் செல்விஜெயலலிதா, தொலைநோக்கு சிந்தனை கொண்ட மிகப்பெரிய தலைவர் - அரசியல் ஞானத்துடனும், தலைசிறந்த தலைமைப் பண்புகளுடனும் திகழ்ந்த அவர், மக்களின் மிக நெருங்கிய தலைவராக விளங்கினார் - மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவதுடன், அவர்களுக்கு முன் உதாரணமாகவும் திகழ்ந்தார் - தமிழக மக்களுக்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளிலும், தன்னலம் இல்லாமல் மக்களுக்காகவே செயல்பட்டதால், அவர் மக்களின் தாயாகவே திகழ்ந்தார் - மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், இலங்கை மக்களின் சார்பாகவும், அரசின் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாக இலங்கை பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்கு, சென்னையில் உள்ள ஜெர்மனி நாட்டின் தூதர் Achim Fabig ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இரங்கல் கடிதத்தை தமிழக ஆளுநர் திரு.வித்யாசாகர் ராவுக்கு அனுப்பியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00