இலங்கை வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் சொந்த இடங்களில் பாதுகாப்பாக வாழவும், தமிழர்கள் தம்மைத்தாமே ஆளக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தவேண்டும் எனக் கருதி, முனைப்புடன் செயல்பட்டவர் முதலமைச்சர் ஜெயலலிதா : இலங்கை வடக்கு மாகாண சபையில் முதலமைச்சருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்

Dec 7 2016 9:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் சொந்த இடங்களில் பாதுகாப்பாக வாழவும், தமிழர்கள் தம்மைத்தாமே ஆளக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தவேண்டும் எனக் கருதி, முனைப்புடன் செயல்பட்டவர் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா என இலங்கை வடக்கு மாகாண சபையில், முதலமைச்சருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, அமரத்துவம் தொடர்பாக ஈழத் தமிழர் சார்பாக வடக்கு மாகாண சபையின், கவுரவ முதலமைச்சர் நீதியரசர் க.வீ. விக்னேஸ்வரன் முன்மொழிந்து வடக்கு மாகாண சபைக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசியலில் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்ட முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா காலமானது, எம் எல்லோருக்கும் மிகுந்த சோகத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது - வால்வெள்ளி ஒன்று அரசியல் வானில் பளிச்சென்று பிரகாசமாகி நின்று, பின்னர் திடீரென மறைந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது - "அம்மா" என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவர், தமிழகத்தில் மட்டுமல்லாது, பாரத நாட்டு அரசியலிலும் முக்கியப் பங்கு வகித்தார் - முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், தமிழ்நாடு, பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், மேலும் பல துறைகளிலும் மிக உன்னத நிலையை அடைந்தது - இலங்கை வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் சொந்த இடங்களில் பாதுகாப்பாக வாழவும், தமிழர்கள் தம்மைத்தாமே ஆளக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தவேண்டும் எனக் கருதி, முனைப்புடன் செயல்பட்டவர் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்ச் சமுதாயம், தமக்காக குரல்கொடுத்த ஒரு பலம் மிக்க அரசியல் தலைவரை இழந்துவிட்டது - அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு, எம் மக்களின் ஒன்றுபட்ட சோகத்தினை தமிழ்நாட்டு மக்களுடன் பகிர்ந்துகொள்வதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00