தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு - தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல்

Dec 7 2016 9:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலைமையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு. பாலச்சந்திரன், தென்மேற்கு வங்கக்கடலில் விசாகப்பட்டினத்திற்கு அருகே ஆயிரத்து 180 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். இது, 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில்தமிழகத்தில் அதிகபட்சமாக தக்கலையில் 4 சென்டிமீட்டர் மழையும், இரணியல், பாபநாசம் ஆகிய இடங்களில் 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, பாம்பன், நாகை, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் எச்சரிக்கையாக சென்று வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்தமானில் பலத்த மழை பெய்து வருவதால், அங்கு சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. Havelock பகுதியில் சிக்கியுள்ள 800-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை மீட்க கப்பல்கள் விரைந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00