கோடான கோடி உலகத் தமிழர்களின் கண்ணீர் அஞ்சலிக்கிடையே மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் - அணி அணியாக மக்கள் திரண்டு பிரியாவிடை

Dec 7 2016 3:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடல், நேற்று மாலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.சென்னை மெரினா கடற்கரையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே, ராணுவ வீரர்களின் துப்பாக்கி குண்டுகள் முழங்க, முதலமைச்சரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மறைவு, ஒட்டுமொத்த இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் உடலுக்கு, லட்சக்கணக்கான அ.இ.அதி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடல்,கண்ணாடிப் பேழையில் வைத்து, அலங்கரிக்கப்பட்ட ராணுவ பீரங்கி வாகனத்தில் ஏற்றப்பட்டது. முப்படை வீரர்கள், இந்தப் பேழையை பீரங்கி வாகனத்தில் வைத்தனர். ராஜாஜி அரங்கில் இந்த காட்சியை நேரில் கண்ணுற்ற லட்சக்கணக்கான அ.இ.அ.தி.மு.க தொண்டர்களும், பொதுமக்களும் துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டுக் கதறியழுதனர். இதனைத் தொடர்ந்து, இறுதி ஊர்வலம் தொடங்கியது.

அண்ணா சாலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக இறுதி ஊர்வலம் சென்றது. பெருந்துயரில் மூழ்கியிருந்த மக்கள் வெள்ளத்தின் இடையே இறுதி ஊர்வலம் நகர்ந்து செல்ல, லட்சக் கணக்கான கழக உடன்பிறப்புகளும் பொதுமக்களும், உலக சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கும் தன்னிகரில்லா தலைவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியபடி, சோகமே உருவாக ஊர்வலத்தில் நடந்து சென்றனர்.

சென்னை மெரினா கடற்கரையை இறுதி ஊர்வலம் சென்றடைந்தது.புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே, உடல் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு, முதலமைச்சரின் உடலுக்கு தமிழக ஆளுநர் திரு.வித்தியாசாகர் ராவ், மத்திய அமைச்சர்கள் திரு.வெங்கய்ய நாயுடு, திரு.பொன்.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை, தமிழக சட்டமன்றப் பேரவை தலைவர் திரு.ப.தனபால், தமிழக முன்னாள் ஆளுநர் டாக்டர் கே.ரோசய்யா, அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் திரு.ராகுல்காந்தி, முப்படைகளின் ராணுவ உயரதிகாரிகள், மலர் தூவியும், மலர் வளையம் வைத்தும் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து, இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

பின்னர், "புரட்சித் தலைவி செல்விஜெ ஜெயலலிதா" என தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பெயர் பொறிக்கப்பட்ட சந்தனப் பேழையில், முதலமைச்சரின் உடல் வைக்கப்பட்டது. இறுதி அஞ்சலிக்குப் பின்னர், ராணுவ வீரர்களின் துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் முதலமைச்சரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

"அம்மா" என்று அகிலமே அன்போடு அழைக்கும், முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா, இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும், கோடானகோடி மக்கள் மனங்களில் என்றென்றும் நிறைந்து, வளமான வாழ்வுக்கு என்றென்றும் வழிகாட்டியாக வாழ்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை!
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00