தமிழக மக்கள் நலன் ஒன்றையே தமது உயிர் மூச்சாகக் கொண்டு, தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, அரும்பணியாற்றிய முதலமைச்சர் ஜெயலலிதா மறைவால் கண்ணீர் கடலில் மூழ்கியது தமிழகம் : குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் அஞ்சலி

Dec 7 2016 3:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக மக்கள் நலன் ஒன்றையே தமது உயிர் மூச்சாகக் கொண்டு, மக்கள் நல்வாழ்வுக்காக, தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, அரும்பணியாற்றி வந்த, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, நேற்று முன்தினம் இரவு காலமானார். இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர், முதலமைச்சர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். முதலமைச்சரின் உடல், முழு அரசு மரியாதையுடன், சென்னை கடற்கரையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான அ.இ.அ.தி.மு.க தொண்டர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா, சென்னை அப்பலோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் காலமானார். முதலமைச்சரின் மறைவை அடுத்து, இந்திய துணைக் கண்டமும், உலகின் ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயமும், மீளாத் துயரில் மூழ்கியுள்ளது. கோடானுகோடி அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், தமிழகத்தின் அனைத்து மக்களும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மறைவால் தாங்கவொணா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடல், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள, ராஜாஜி ஹாலில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று அதிகாலையில் இருந்து, தங்கள் மகத்தான தலைவருக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களும், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும் லட்சக்கணக்கில் அணிவகுத்து வந்தனர். இதனால், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம் மற்றும் அண்ணாசாலை பகுதி முழுவதும், மக்கள் கடலாக காட்சியளித்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00