மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை - பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கான நீர்வரத்து அதிகரிப்பு

Dec 4 2016 4:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த முறை எதிர்பார்த்த அளவுக்கு பருவமழை கிடைக்காத போதிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டிய கன்னியாகுமரி , நெல்லை மாவட்டங்களில் கணிசமாக மழை பெய்து வருகிறது. நெல்லையில் உள்ள தென்காசி, செங்கோட்டை, சிவகிரி பகுதிகளில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று 31 புள்ளி மூன்று, பூஜ்ஜியம் அடியாக உயர்ந்தது. அணைக்கு சுமார் 81 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைப் பகுதியில் இன்று காலை நிலவரப்படி, 3 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. சேர்வலாறு, மணிமுத்தாறு, அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதேபோல், கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, நம்பியாறு அணை ஆகியவற்றின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00