சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக இதுவரை 12 குற்றவாளிகள் கைது - 859 சிலைகள் பறிமுதல் : காவல்துறை அறிவிப்பு

Oct 28 2016 7:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக இதுவரை 12 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 859 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் கலைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த தனியார் நிறுவனத்தில் இருந்து ஏராளமான பழங்கால ஐம்பொன் சிலைகள், கற்சிலைகள் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக, சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, கடந்த மே மாதம் 31-ம் தேதி அந்த இடத்தில் இருந்து சுமார் 50 பழங்கால கற்சிலைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் உரிமையாளர் தீனதயாளன் என்பவர் கைது செய்யப்பட்டார். சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், இவ்வழக்கில் இதுவரை 12 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, புதுச்சேரியில் தீனதயாளனின் கூட்டாளியான, புஷ்பராஜ், ரஞ்சித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நடத்தி வந்த கலைக்கூடத்திலிருந்து 11 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சிலைகளின் மதிப்பு 50 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள், கிண்டியிலுள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்து இதுவரை 850 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சிலை கடத்தலில் சம்பந்தப்பட்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதியினரிடமும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00