அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லிதோப்பு தொகுதிகளுக்கான தேர்தல் : அனைத்துத் தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்ட அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

Oct 28 2016 8:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் புதுச்சேரி நெல்லிதோப்பு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் உடனடியாக தங்கள் பிரச்சாரத்தை தொடங்கினர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அவர்களுக்கு, செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. A.K. போஸை ஆதரித்து, கழகத்தினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். திருநகர், பூங்கா தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழக வேட்பாளரை ஆதரித்து, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களும், அமைச்சர்களுமான திரு. O. பன்னீர்செல்வம், திரு. திண்டுக்கல் C. சீனிவாசன், திரு. செல்லூர் K. ராஜூ, திரு. R.B. உதயகுமார், திரு. K.T. ராஜேந்திர பாலாஜி மற்றும் அமைச்சர்கள் திரு. பெஞ்ஜமின், திரு. K. பாண்டியராஜன், திருமதி. ராஜலட்சுமி, திரு. மணிகண்டன், திரு. கடம்பூர் ராஜூ மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கழகத்தினர் வீதிவீதியாகச் சென்று, பிரச்சாரம் மேற்கொண்டனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் மேற்கொண்டுள்ள கழக வேட்பாளருக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. M. ரெங்கசாமி, தஞ்சை மணிமண்டபம் அருகே பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கிருந்த கடைகளுக்கு சென்று, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சாதனைகளை எடுத்துக்கூறும் பிரசுரங்களை வழங்கி, இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசு, கடந்த 5 ஆண்டு காலத்தில் நிறைவேற்றிய சாதனை திட்டங்களையும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். பிரச்சாரத்தின்போது, தஞ்சை தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் திரு.R. வைத்திலிங்கம் M.P., அமைச்சர்கள் திரு.S.P. வேலுமணி, திரு.R.காமராஜ், திரு.O.S.மணியன், திரு.உடுமலை K.ராதாகிருஷ்ணன், டாக்டர். C. விஜயபாஸ்கர், திரு.R.துரைக்கண்ணு, திரு.G.பாஸ்கரன், திரு. ப.குமார் M.P. மற்றும் அமைச்சர்கள் திரு. வெல்லமண்டி நடராஜன், திருமதி. வளர்மதி, துணை சபாநாயகர் திரு. பொள்ளாச்சி வ. ஜெயராமன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. நவநீதகிருஷ்ணன், திரு. கு. பரசுராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கான கழக தேர்தல் பணிமனை, தொம்பன்குடிசை பகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இதேபோன்று, கரூர் மாவட்ட அரவக்குறிச்சி தொகுதியில் கழக வேட்பாளர் திரு. V. செந்தில்பாலாஜி தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக, கழக தேர்தல் பொறுப்பாளர்கள் திரு.எடப்பாடி K. பழனிசாமி, திரு. P.தங்கமணி, திரு.A. அன்வர்ராஜா எம்.பி., திரு.K.C. கருப்பணன், திரு.M.R. விஜயபாஸ்கர் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, பிரச்சாரம் மேற்கொண்டனர்.

புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதி கழக வேட்பாளர் திரு. ஓம்சக்தி சேகர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருக்கு ஆதரவாக, கழகத் தேர்தல் பொறுப்பாளர்கள் திரு.C.Ve. சண்முகம், திரு.M.C.சம்பத் மற்றும் திரு.செ.செம்மலை எம்.எல்.ஏ., அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் திரு.சொரத்தூர் இரா.ராஜேந்திரன், புதுச்சேரி மாநில கழகச் செயலாளர் திரு.பெ. புருஷோத்தமன் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00