தீபாவளி பண்டிகையை விபத்தில்லாமல் கொண்டாட வேண்டுமென சுகாதாரத் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் வேண்டுகோள் : அவசர உதவிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார்

Oct 28 2016 8:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

தீபாவளி பண்டிகையை விபத்தில்லாமல் கொண்டாட வேண்டுமென சுகாதாரத் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவசர உதவிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தீபாவளி பண்டிகையை விபத்தில்லாமல் பாதுகாப்புடன் கொண்டாட வேண்டுமென, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். தீபாவளியின்போது, குழந்தைகள் பெரியவர்களுடன் தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். சென்னையில் 35 இடங்களில் தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், வெளி மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்களும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீபாவளிக்காக அவசர உதவி வாகனமான 108 சேவை வாகனங்கள் தமிழகம் முழுவதும் 811 இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 108 சேவை சார்பில், விபத்தில்லா தீபாவளி கொண்டாட வலியுறுத்தி, பொதுமக்களுக்கு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீக் காயத்திற்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில், 10 படுக்கைகள் கொண்ட தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரும் 20-ம் தேதி வரை செயல்பட உள்ள இப்பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து சிகிச்சை வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00