முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல்நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்பு வழிபாடு : லட்சக்கணக்கான அ.இ.அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும், முதலமைச்சருக்காக மனமுருக பிரார்த்தனை

Oct 28 2016 1:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பூரண உடல்நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்பு வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. லட்சக்கணக்கான அ.இ.அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும், முதலமைச்சருக்காக மனமுருக பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்போலோ மருத்துவமனை அருகே, பகவதி அம்மன் சேவை என்ற பெயரில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று, மனமுருக பிரார்த்தனை செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் பகுதி அ.இ.அ.தி.மு.க சார்பில், மாதவரம் ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் திருக்கோவிலில், 108 மூலிகைகளைக் கொண்டு, கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், தன்வந்திரி ஹோமம், ஆயுஷ் ஹோமம், மிருத்யுஞ்ய ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக் கழகம் சார்பில், ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி ஆலயங்களில், கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், தன்வந்திரி ஹோமம், ஆயுஷ் ஹோமம், மிருத்யுஞ்ய ஹோமம், சுதர்சன ஹோமம் மற்றும் கோ பூஜை, கஜ பூஜை ஆகியவை நடைபெற்றன.

ஆலந்தூர் நகரக் கழகம் சார்பில், பழவந்தாங்கல் வரசித்தி விநாயகர் கோயிலில் இருந்து, ஆயிரத்து எட்டு பேர் பால்குடம் எடுத்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ராஜ ராஜேஸ்வரி கோயிலைச் சென்றடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

தாம்பரம் நகரக் கழகம் சார்பில், பீமேஸ்வரர் கோயிலில் சுதர்சன ஹோமம், தன்வந்தரி ஹோமம், ஆயுஷ் ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழக மாணவர் அணி சார்பில், பழைய கருவாட்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டு பிரார்த்தனை மேற்கொண்டனர்.

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பில் திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயிலில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன. இதில், அமைச்சர் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று முதலமைச்சர் பூரண நலம்பெற வேண்டி சுவாமியை மனமுருக வழிபட்டனர்.

திருக்கோவிலூர் ஒன்றியக் கழகம் சார்பில், பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் ஆயிரத்து எட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சுதர்சன ஹோமம், தன்வந்தரி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

ஈரோடு மாவட்டம் குமலன்குட்டை பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்டவற்றை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கரூர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன.

நெல்லை மாநகர் மாவட்டக் கழகம் சார்பில், பாளையங்கோட்டையில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவ, மாணவிகள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதேபோன்று, தமிழகத்தின் பல்வேறு திருக்கோயில்களில், அ.இ.அ.திமு.க.வினர் சார்பிலும், பொது மக்கள் சார்பிலும் சிறப்பு வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00