சென்னையில் பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் 5 வட்டங்களில் நடைபெற்று வரும் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் : பகுதிகளிலேயே உடனுக்குடன் தேவையான சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்த முதலமைச்சருக்கு, பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

Oct 28 2016 1:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை மாவட்டத்தில் பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் 5 வட்டங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் இன்று நடைபெற்று வருகின்றன. உடனுக்குடன் தங்கள் பகுதிகளிலேயே தேவையான சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்த முதலமைச்சருக்கு, பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில், "மக்களைத் தேடி அரசு" என்ற முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் உன்னதத் திட்டத்தின்கீழ், தமிழகம் முழுவதும் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாறுதல் போன்ற 16 வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மாம்பலம், தண்டையார்பேட்டை, பெரம்பூர், மைலாப்பூர், எழும்பூர் ஆகிய 5 வட்டங்களில் இன்று இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தண்டையார்பேட்டை வட்டம் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில், வருமான சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களைக் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உடனுக்குடன் தங்கள் பகுதிகளிலேயே தேவையான சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்த முதலமைச்சருக்கு, பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

பெரம்பூர் வட்டம் வியாசர்பாடி M.K.B. நகரில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில், ஏராளமானோர் பங்கேற்று, சான்றிதழ்களைப் பெற்று பயனடைந்தனர்.

மைலப்பூர் வட்டம் ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டு, சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.

எழும்பூர் வட்டம் சேத்துப்பட்டில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில், ஆண்களும், பெண்களும் திரளாக பங்கேற்று சான்றிதழ்களைப் பெற்றுச் சென்றனர்.

இதேபோன்று, மாம்பலம் வட்டத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் ஏராளமான பொதுமக்கள் மனுக்களை அளித்து உடனடியாக சான்றிதழ்களை பெற்று சென்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00