தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையை கருத்தில்கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் : பயிற்சிபெற்ற மீனவர்கள், நீச்சல் வீரர்கள், படகுகளுடன் தயார் நிலையில் இருப்பதாக கடலோர காவல்படை குழும ஏ.டி.ஜி.பி. தகவல்

Oct 28 2016 1:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையை கருத்தில்கொண்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக, நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையை விரைவில் எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையை கருத்தில்கொண்டு, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிற்சிபெற்ற மீனவர்கள், நீச்சல் வீரர்கள், படகுகளுடன் தயார் நிலையில் இருப்பதாக, தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கடலோர காவல்படை குழும ஏ.டி.ஜி.பி. திரு.சைலேந்திரபாபு தெரிவித்தார்.

இதனிடையே, வடகிழக்குப் பருவமழையின்போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், காரைக்காலில் நடைபெற்றது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். 67 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், ஆற்றங்கரைகளைப் பாதுகாக்கும் வகையில் 2 லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், செம்போடை, விழுந்தமாவடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. நேரடி நெல் விதைப்பு மேற்கொண்டுள்ள வயல்களுக்கு இம்மழை பயனுள்ளதாக இருக்கும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00