கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் : மக்களவை துணை சபாநாயகர் மற்றும் 11 அமைச்சர்கள் பங்கேற்பு

Oct 28 2016 1:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தலை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மக்களவை துணை சபாநாயகர் மற்றும் 11 அமைச்சர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதிக்கும் அடுத்த மாதம் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, நேற்றுமுன்தினம் முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, அரவக்குறிச்சியில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் திரு. வி. செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார். இத்தேர்தலை முன்னிட்டு, கரூர் மாவட்ட கழகம் சார்பில், கழக கொள்கைபரப்புச் செயலாளரும், மக்களவை துணை சபாநாயகரும் டாக்டர் மு. தம்பிதுரை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், அமைச்சருமான திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி, திரு. P. தங்கமணி, திரு. D. ஜெயக்குமார், திரு. K.P. அன்பழகன், திரு. K.C. வீரமணி, திருமதி. நிலோபர் கபில், திரு. சேவூர் ராமச்சந்திரன், திருமதி. வி. சரோஜா, திரு. பாலகிருஷ்ணா ரெட்டி, திரு. K.V. கருப்பணன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அன்வர்ராஜா ஆகியோர் பங்கேற்றனர். தேர்தலை எதிர்கொள்ளும் யுத்திகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00