விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து, ஈரோட்டில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

Oct 26 2016 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து, ஈரோட்டில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து, ஈரோடு மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள்,பட்டாசு வெடிக்கும்போது மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பதாகைககளை கையில் ஏந்திச் சென்றனர். இந்தப் பேரணியில், தீயணைப்புத்துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதனிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ள நிலையில், நாகர்கோவிலில் உள்ள பல்வேறு பட்டாசு விற்பனை கடைகளில், அதிகாரிகள், இன்று குழுக்களாக சென்று சோதனை நடத்தினர். முறையாக உரிமம், பாதுகாப்பு வசதிகள் இல்லாத பட்டாசு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00