அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு தொகுதிகளுக்கு அ.இ.அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் - கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவிப்பு

Oct 26 2016 4:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிபொதுத்தேர்தலுக்கும், திருப்பரங்குன்றம் தொகுதியிலும், புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியிலும் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தலும், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் கழக பொறுப்பாளர்களை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நியமித்துள்ளார்.

அதன்படி, அரவக்குறிச்சி தொகுதிக்கு அமைச்சர்கள் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி, திரு. பி.தங்கமணி, திரு.கே.சி.கருப்பண்ணன், திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் திரு.ஏ.அன்வர்ராஜா எம்.பி., ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் தொகுதிக்கு அமைச்சர்கள் திரு.எஸ்.பி.வேலுமணி, திரு.ஆர்.காமராஜ், திரு.ஓ.எஸ்.மணியன், திரு.உடுமலை கே.ராதாகிருஷ்ணன், டாக்டர். சி. விஜயபாஸ்கர், திரு.ஆர்.துரைக்கண்ணு, திரு.G.பாஸ்கரன் மற்றும் திரு.ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., திரு. ப.குமார் எம்.பி. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, திருப்பரங்குன்றம் தொகுதிக்கு, அமைச்சர்கள் திரு. ஓ.பன்னீர்செல்வம், திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன், திரு.செல்லூர் கே.ராஜு, திரு.R.B.உதயகுமார், திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதிக்கு, அமைச்சர்கள் திரு.சி.வி.சண்முகம், திரு.எம்.சி.சம்பத் மற்றும் திரு.செ.செம்மலை எம்.எல்.ஏ., அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் திரு.சொரத்தூர் இரா.ராஜேந்திரன், புதுச்சேரி மாநில கழகச் செயலாளர் திரு.பெ.புருஷோத்தமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடைபெறவுள்ள சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுவதாக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00