திருவாரூர் அரசு மருத்துவமனையில், அதிநவீன 'பல்' சிகிச்சை கருவி - அதிக செலவு பிடிக்கும் சிகிச்சைகள் கட்டணமின்றி அளிக்கப்படுவதால் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பயனாளிகள் நன்றி

Oct 26 2016 6:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 'பல்' சிகிச்சைக்கான நவீன கருவி அமைக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் ரூபாய் செலவாகும் சிகிச்சை கட்டணமில்லாமல் அளிக்கப்படுவதால் முதலமைச்சருக்கு பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஏழை-எளிய மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நவீன அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் நவீனக் கருவிகளை நிறுவி ஏழை - எளிய மக்களுக்கும் உயர்தர சிகிச்சை கிடைக்க வழி செய்துள்ளார். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இருதய நோய், காசநோய், எலும்பு சிகிச்சை, கண் சிகிச்சை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மூளை மற்றும் நரம்பியல் என அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் தொடங்கப்பட்டு, ஏழை எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புறநோயாளிகள் பிரிவில் 'பல்' சிகிச்சைக்கான நவீன Dental Chair தற்போது நிறுவப்பட்டுள்ளது. இந்த நவீன கருவியை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் இன்று தொடங்கி வைத்தார். இந்த நவீன கருவி மூலம் நோயாளிக்கு அந்த இடத்திலேயே X-ray எடுப்பதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஈறு மற்றும் பல் அறுவை சிகிச்சைகளும் உடனுக்குடன் செய்வதற்கு வசதி ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் ரூபாய் செலவாகக்கூடிய ஈறு அறுவை சிகிச்சை மற்றும் 'பல்' அறுவை சிகிச்சை கட்டணமில்லாமல் அளிக்கப்படுவதால், பயனாளிகள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00