காவேரி மேலாண்மை வாரியத்தை அடுத்த 3 நாட்களில் அமைக்க வேண்டும் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் - நாளை முதல் வரும் 6-ம் தேதி வரை கர்நாடக அரசு காவேரியில் விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடவும் உத்தரவு

Sep 30 2016 4:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

காவேரி மேலாண்மை வாரியத்தை அடுத்த 3 நாட்களில் அமைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நாளை முதல் வரும் 6-ம் தேதி வரை கர்நாடக அரசு காவேரியில் விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லியில் காவேரி பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பான அறிக்கையை மத்திய அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.

டெல்லியில் நேற்று தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே மத்திய நீர்வளத்துறை அமைச்சர் செல்வி. உமா பாரதி முன்னிலையில், காவேரி பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தமிழகத்தின் சார்பில், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் அறிக்கை வாசிக்கப்பட்டது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தனது அறிக்கையில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க கர்நாடகா உடனடியாக தண்ணீர் திறந்துவிடுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற ஆணையின்படி உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். கர்நாடகம் தண்ணீரை திறந்துவிட மறுப்பது அரசியல் சாசன உணர்வை வேண்டுமென்றே மீறுவதாகவும் முதலமைச்சர் குற்றச்சாட்டினார்.

இந்நிலையில், காவேரி பிரச்சினையில் இருமாநிலங்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை விவரங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய அரசு அட்டர்னி ஜெனரல் மூலம் உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. நீதிபதிகள் திரு. தீபக் மிஸ்ரா, திரு. U.U. லலித் ஆகியோர் முன்னிலையில், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசு அடுத்த 3 நாட்களில் காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நாளை முதல் வரும் 6-ம் தேதி வரை கர்நாடக அரசு காவேரியில் விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00