தமிழக உள்ளாட்சித் தேர்தலில், 124 நகராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிக்கு, அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 3,613 வேட்பாளர்கள் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு - 528 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிக்கு 8,288 வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டார் முதலமைச்சர்

Sep 30 2016 10:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக உள்ளாட்சித் தேர்தலில், 124 நகராட்சிகளின், நகரமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 3,613 வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் 528 பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் 8,288 வேட்பாளர்களின் பட்டியலை, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா, அக்டோபர் மாதம் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 12 மாநகராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் மற்றும் 31 மாவட்ட ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அ.இ.அ.தி.மு.க. ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, நகரமன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தலில், கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தமிழகத்தில் உள்ள 124 நகராட்சிகளின் நகரமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் 3,613 வேட்பாளர்கள் மற்றும் 528 பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் 8,288 வேட்பாளர்கள் பட்டியலை, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.









செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00