உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின்படியும், காவேரி நடுவர்மன்ற தீர்ப்பின்படியும் தமிழகத்திற்கு தரப்பட வேண்டிய 76.042 டி.எம்.சி. அடி தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் - டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவின் உரையில் வலியுறுத்தல்

Sep 29 2016 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க காவேரி நதிநீர் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் தொடங்கியுள்ளது. இதில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க, தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகள் அடங்கிய குழு கலந்துகொண்டுள்ளது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உரை வாசிக்கப்பட்டது.

காவேரி நதிநீர் பிரச்னை தொடர்பான வழக்கை கடந்த 23-ம் தேதி மீண்டும் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், திரு. தீபக் மிஸ்ரா, திரு. U.U. லலித் ஆகியோர், இப்பிரச்னை குறித்து, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில நிர்வாகத் தலைவர்கள் கூட்டத்தை மத்திய அரசு கூட்டி, கருத்து கேட்டு, வரும் 30-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி, மத்திய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் காவேரி நதிநீர் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.ராமமோகனராவ், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் திரு.எஸ்.கே.பிரபாகர், காவேரி தொழில்நுட்பப்பிரிவு தலைவர் திரு.சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் செல்வி உமாபாரதி கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உரையை தலைமைச் செயலாளர் திரு.ராமமோகனராவ் வாசித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00