முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகத்தான திட்டங்களில் ஒன்றான விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் : ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் ஏராளமான பயனாளிகள் விலையில்லா ஆடுகள் பெற்று பயன்

Sep 29 2016 11:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மகத்தான திட்டங்களில் ஒன்றான விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு அடைந்துள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் ஏராளமான பயனாளிகள் விலையில்லா ஆடுகள் பெற்று பயனடைந்துள்ளனர்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம், கிராமப்புற மக்களின் வாழக்கைத் தரத்தை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது.

அந்த வகையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதி அரக்கன்கோட்டை ஊராட்சியில் கடந்த 2014ம் ஆண்டு, 64 ஏழைக் குடும்பங்களுக்கு தலா நான்கு ஆடுகள் வீதம் 256 ஆடுகள் வழங்கப்பட்டன. இவற்றை கிராமப் பெண்கள் நன்கு வளர்த்து வருகின்றனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, கால்நடை மருத்துவர்கள் நேரில் வந்து, ஆடுகளுக்கு தடுப்பூசி, குடற்புழு நீக்க முகாம் நடத்தி, அவற்றை ஆரோக்கியமாக வளர்க்க உதவுகின்றனர். இதன்மூலம் இப்பகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் 25 முதல் 35 ஆடுகள் வரை என, ஆயிரத்து 500 ஆடுகளாக பெருகியுள்ளது. மழை மற்றும் வெயிலில் இருந்து ஆடுகளை பாதுகாக்க 80 ஆயிரம் ரூபாய் செலவில் விலையில்லா தகர கொட்டகைகளும் அரசு சார்பில் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பயனாளிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00