தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் 14 பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் - அவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 14 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவு

Aug 27 2016 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா 1 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 14 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதியன்று, நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், கோபாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. தெய்வசிகாமணி என்பவரின் மகன் திரு. ராஜேந்திரன்;

கடந்த ஜூன் மாதம் 7-ம் தேதியன்று தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், குடுமியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. வீரப்பன் என்பவரின் மகன் செல்வன் விஷால்;

9-ம் தேதியன்று திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகரம், காந்தி நகரைச் சேர்ந்த திரு. பரமசிவம் என்பவரின் மகன் செல்வன் யோகேஸ்வரன்;

12-ம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டம், நாரவாரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த திரு. கோகுல் என்பவரின் மகன் செல்வன் ராகுல், திரு. அன்பழன் என்பவரின் மகன் செல்வன் பிரேம்நாத்;

17-ம் தேதியன்று விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வி.சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. சுந்தரகவுண்டர் என்பவரின் மகன் திரு. மாணிக்கம்;

24-ம் தேதியன்று நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், அகர எலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. தூண்டி என்பவரின் மனைவி திருமதி ஜானகி;

26-ம் தேதியன்று விருதுநகர் மாவட்டம், இராஜபாளையயம் வட்டம், சின்ன சுரைக்காய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. மாரிசெல்வம் என்பவரின் மகன் திரு. பழனிவேல் முருகன், திரு. குமார் என்பவரின் மகன் திரு. ஜெயபிரகாஷ், இராஜபாளையம் நகரைச் சேர்ந்த திரு. குமாரவேல் என்பவரின் மகன் திரு. ஜோதிவேல்; கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், பெரியாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த திரு. சந்திரசேகரன் என்பவரின் மகன் செல்வன் தனுஷ்;

கடந்த ஜூலை மாதம் 8-ம் தேதியன்று சிவகங்கை மாவட்டம், தமறாக்கி தெற்கு கிராமத்தைச் சேர்ந்த திரு. பஞ்சவர்ணம் என்பவரின் மகன் திரு. சேதுமாதவன்;

9-ம் தேதியன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் வட்டம், அலகரை மேற்கு கிராமத்தைச் சேர்ந்த திரு. லட்சுமணன் என்பவரின் மகன் திரு. கமலநாதன் என்கிற திரு. செந்தில்நாதன்;

கடந்த ஒன்றாம் தேதியன்று மதுரை மாவட்டம் வடிவேல்கரை கிராமத்தைச் சேர்ந்த திரு. சித்திரை விநாயகம் என்பவரின் மகன் திரு. சின்னகாளை ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00