கிருஷ்ணகிரியில், யானைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், வனத்துறை சார்பில், இரவில் ஒளிரும் விழிப்புணர்வு பலகைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்

Aug 27 2016 8:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரியில், யானைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், வனத்துறை சார்பில், இரவில் ஒளிரும் விழிப்புணர்வு பலகைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆந்திரா மற்றும் கர்நாடகா வனப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள 100க்கும் மேற்பட்ட யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள், இரவு நேரங்களில் உணவு தேடி தேசிய நெடுஞ்சாலைகளை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்க நேரிடுகிறது. இதனை தடுக்கும் வகையில், வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஓசூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதிகளான மேல்மலை, சூளகிரி, சானமாவு உள்ளிட்ட பகுதிகளில், இரவில் ஒளிரும் விழிப்புணர்வு பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம், இப்பகுதிகளை வாகனங்கள் கடக்கும் போது, அவற்றின் வேகம் குறைக்கப்பட்டு, சாலைகளில் யானைகள் மீது வாகனங்கள் மோதும் சம்பவங்கள் தவிர்க்கப்படும் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00