முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுடன் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டன

Aug 27 2016 7:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுடன், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டன.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம், பள்ளிக்கூடம் ஆகியவற்றை அமைச்சர் திரு.உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கைக்கால் பகுதியில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, பட்டுவளர்ச்சித் துறை சார்பில், மாநில சமச்சீர் நிதித்திட்டம் குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. அமைச்சர் திரு.சேவூர் ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இதேபோல், ஆரணி தொகுதிக்குட்பட்ட மட்டதாரி கிராமத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 98 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருச்சியில் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, பச்சைமலை சூழல் சுற்றுலா மையப் பணிகள் மற்றும் ஸ்ரீரங்கம் பட்டாம்பூச்சி பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து அமைச்சர் திரு. திண்டுக்கல் சீனிவாசன் வனத்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க, ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய பள்ளி கட்டடங்கள் கட்டுவதற்கான பணியை அரசு தலைமை கொறடா திரு.தாமரை எஸ். ராஜேந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும்போது கையாள வேண்டிய விதிமுறைகள் குறித்து பட்டாசு தயாரிப்பாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் திரு.K.T.ராஜேந்திர பாலாஜி, டாக்டர் நிலோஃபர் கபில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, திருவாரூர் மாவட்டத்தில், கிராமப்புற ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், 30 சிறப்பு மருத்துவ முகாம்களை அமைச்சர் திரு.ஆர்.காமராஜ் துவக்கி வைத்தார். அப்போது, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், விலையில்லா மூக்குக் கண்ணாடி, அம்மா ஆரோக்கியா திட்டத்தின் கீழ் அடையாள அட்டை போன்றவை வழங்கப்பட்டன.

வேலூர் மாவட்டம் ஆற்காடு நகரில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன முறையில் குப்பை அகற்றும் குப்பை தொட்டிகள், அமைக்கப்பட்டுள்ளதை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி துவக்கி வைத்தார். இதேபோல், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையமும் திறந்துவைக்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00