கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக அரசின் சிறப்பு மானிய உதவியுடன் முதற்கட்டமாக 15 கிராமங்களில் பயறு உற்பத்தி பயிற்சி முகாம்கள் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Aug 25 2016 10:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக அரசின் சிறப்பு மானிய உதவியுடன் முதற்கட்டமாக 15 கிராமங்களில் பயறு உற்பத்தி பயிற்சி முகாம்கள் தொடங்கியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, குறைந்த செலவில் அதிக பயறு மகசூலை பெறும் வகையில், பல்வேறு சிறப்பு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் பயறு வகைகளின் உற்பத்தி கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண்துறையின் மூலம் முதற்கட்டமாக 15 கிராமங்களில் பயறு உற்பத்தி சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. நாகர்கோவிலை அடுத்துள்ள எறும்புக்காடு பகுதியில் நடைபெற்ற பயறு சாகுபடி குறித்த பயிற்சி முகாமில் வேளாண்மை துறை அதிகாரிகள் பங்கேற்று சாகுபடி முறைகள், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமளித்தனர். மேலும் பயறு சாகுபடி பணிகளையும் தொடங்கிவைத்தனர். மானிய உதவியுடன் பயறு சாகுபடியை ஊக்கப்படுத்தி வரும் முதலமைச்சருக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 100 ஹெக்டேர் அளவில் பயறு சாகுபடி பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், 2 ஆயிரம் ஹெக்டேர் அளவில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட வேளாண்துறை அதிகாரி திரு.சந்திரசேகரன் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00