திருவாரூர் மாவட்டத்தில் டெல்டா விவசாயத்தை பாதுகாக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி முதல் கட்டமாக 960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல்நீர் உட்புகா வண்ணம் ஆறுகளில் தூர்வாரும் பணிகள் மும்முரம்

Aug 25 2016 7:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் மாவட்டத்தில் டெல்டா விவசாயத்தை பாதுகாக்கும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, முதல் கட்டமாக 960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல்நீர் உட்புகா வண்ணம் ஆறுகளில் தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதிகளான திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில், ஆயிரத்து 560 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாசன ஆறு மற்றும் இறவை பாசன திட்ட மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அறிவித்திருந்தார். அதன்படி, முதற்கட்டமாக 960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவாரூர் மாவட்டத்தில் வெண்ணாறு வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட அரிச்சந்திரா நதி, அடப்பார், வெள்ளையார் உள்ளிட்ட 5 ஆறுகளில் தூர்வாரும் மற்றும் மணல் மேடுகளை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள், டெல்டா விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00