தமிழக கல்லூரிகளில் மாணவர்கள் இடையிலான ராகிங் முற்றிலும் ஒழிப்பு - ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கண்காணிப்பு குழு கூட்டத்தில் தகவல்

Aug 25 2016 7:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக கல்லூரிகளில் மாணவர்கள் இடையிலான ராகிங் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் முதலாமாண்டு சேரும் மாணவ-மாணவியர், ராகிங் செய்யப்படுவதை ஒழிக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆளுநர் டாக்டர் கே. ரோசய்யா தலைமையிலான கண்காணிப்பு குழு, ராகிங் ஒழிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த கண்காணிப்பு குழுவின் 7-வது கூட்டம், சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. ஆளுநர் டாக்டர் கே. ரோசய்யா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கண்காணிப்பு குழு மேற்கொண்டுவரும் தீவிர நடவடிக்கைகளால், தமிழக கல்லூரிகளில் ராகிங் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. K.P. அன்பழகன் தெரிவித்தார். ராகிங்கில் ஈடுபடும் மாணவர்களின் மனநிலையை மாற்ற கவுன்சிலிங் அளித்து, அவர்களை அந்த கல்லூரியின் கண்காணிப்பு குழு உறுப்பினர்களாக்க வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டார். இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் டாக்டர் ராம மோகன ராவ், காவல்துறை தலைவர் திரு. அசோக்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00