கூந்தன்குளத்தில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் அதிகமான பறவை குஞ்சுகள் பொரிப்பு - தாயகம் திரும்ப தயாராகி வரும் அரியவகை வெளிநாட்டுப் பறவைகள்

Jul 30 2016 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை அருகே கூந்தன்குளத்தில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகள், எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அதிகமான குஞ்சுகள் பொறித்துள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லையிலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் கூந்தன் குளம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. சைபீரியா, நைஜீரியா, ஃபிலிப்பைன்ஸ், ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகளில் குளிர்காலம் ஆரம்பிக்கும்போது, அங்கிருந்து பறவைகள் கூந்தன்குளம் கிராமம் வருகின்றன. பின்டைல், பிளாக் விங்டுஸ்டில், கிரேன்கிரான், வக்ரா, காட்டன்டீல், கிரின்சங், ரெட்சங், கரண்டிவாயன், லிட்டில் லிங்டு, செங்கல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கூழக்கடா உள்ளிட்ட பல பறவைகள் கூந்தன்குளத்திற்கு படையெடுத்து, முட்டையிட்டு குஞ்சு பொறித்து, சீசன்காலம் முடியும் தருவாயில் தாயகம் திரும்புகின்றன.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் நல்ல மழை பெய்ததால், கூந்தன்குளத்திற்கு மணிமுத்தாறு அணையிலிருந்து அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. எனவே, அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு பறவைகள் கூந்தன்குளத்தில் குவிந்துள்ளன. அத்துடன், எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அதிக அளவு குஞ்சுகள் பொறித்துள்ள வெளிநாட்டு பறவைகள், தாயகம் திரும்ப தயார் நிலையில் உள்ளன.

கூந்தன்குளத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து, பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, கிராம மக்களும், பறவை ஆர்வலர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00