தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், சாலை விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா, ஆழ்ந்த இரங்கல் :உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் என மொத்தம் 14 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு

Jul 30 2016 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், சாலை விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் என மொத்தம் 14 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மே மாதம் 17-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், பெருங்குடி கிராமத்தைச் சேர்ந்த திரு. அண்ணாமலை என்பவரின் மனைவி திருமதி. பேபி;

கடந்த மே மாதம் 18-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், வீரணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திரு. குள்ளு என்பவரின் மகன் திரு. சுப்ரமணியன்;

கடந்த மே மாதம் 20-ம் தேதி திருவாரூர் நகரம், காந்தி நகரைச் சேர்ந்த திரு. வள்ளிநாயகம் என்பவரின் மகன் திரு. கல்யாணசுந்தரம், மருதப்பாடி பகுதியைச் சேர்ந்த திரு. கோபால் என்பவரின் மகன் திரு. முருகையன்;

கடந்த மே மாதம் 26-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், பழைய சீவரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. மீனாட்சிசுந்தரம் என்பவரின் மகன் திரு. ஞானமூர்த்தி;

கடந்த மே மாதம் 31-ம் தேதி மதுரை மாவட்டம், பி.பி.குளம் கிராமத்தைச் சேர்ந்த திரு. விஜயகுமார் என்பவரின் மகன் செல்வன் மணிகண்டன்;

கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி தருமபுரி மாவட்டம், கள்ளிக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த திரு. முனியப்பன் என்பவரின் மனைவி திருமதி. எல்லம்மாள்;

திருவள்ளூர் மாவட்டம், பாகசாலை கிராமத்தைச் சேர்ந்த திரு. மகந்த் என்பவரின் மனைவி திருமதி. ஷர்மிளா;

கடந்த ஜூன் மாதம் 2-ம் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. ரவி என்பவரின் மனைவி திருமதி ஜெயா ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து தாம் மிகவும் துயமடைந்ததாக தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 24-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம், ஜம்புதுரைக்கோட்டை கிராமம், ஜல்லிப்பட்டி பிரிவு தேசிய நெடுஞ்சாலை அருகே, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. ஆவுடைநாயகன் என்பவரின் மகன் திரு. நல்லதம்பி;

கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை சரகம், ஸ்ரீநார்த்தாமலை முத்துமாரியம்மன் திருக்கோவில் வளைவு அருகே புதுக்கோட்டையிலிருந்து திருச்சிராப்பள்ளி சென்று கொண்டிருந்த வேனும், அறந்தாங்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும் மோதிக் கொண்டதில் வேனில் பயணம் செய்த, திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஓட்டுநர் திரு. ரஜீவன், செல்வன் கிருபா, செல்வி சஜிதா மற்றும் திருமதி. ஜீவகாரணி ஆகியோர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00