அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் :மாற்றுக்கட்சியினர் உட்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் கழகத்தில் இணைந்தனர்

Jul 30 2016 12:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில், புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில், மாற்றுக்கட்சியினர் உட்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக பல்வேறு முன்னோடித் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். இதனால், இளைஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அ.இ.அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில், புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

வடசென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில், கழக இலக்கிய அணி செயலாளர் திருமதி. பா.வளர்மதி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில், குன்றத்தூரில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அமைச்சர் திரு. பா.பெஞ்சமின் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நிறைவேற்றி வரும் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, அவரது தலைமையின் கீழ், கழகத்தில் இணைவதாக புதிய உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00