முதலமைச்சர் ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, மேம்படுத்தப்பட்ட புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு நாகை மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி - பாராட்டு

Jul 30 2016 7:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, மேம்படுத்தப்பட்ட புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு நாகை மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில், மேம்படுத்தப்பட்ட புதிய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்படி, விவசாயிகளின் பாதிப்புகளை நன்கு உணர்ந்த முதலமைச்சர், ஒவ்வொரு கிராம அளவிலும் பயிர் விதைப்பு முதல் அறுவடை வரையிலான காலத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் உள்ளிட்ட அனைத்து இழப்புகளுக்கும், இழப்பீடு வழங்கும் வகையில், இந்த பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் இந்த அறிவிப்புக்கு, விவசாயிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையை தூர்வாருவதற்கு 19 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், கீழ்பவானி வாய்க்கால் பாசன விவசாயிகள், காலிங்கராயன் வாய்க்கால் பாசன விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது, பவானிசாகர் அணையை தூர்வாற 19 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததற்கும், பழமை வாய்ந்த காலிங்கராயன் வாய்க்காலின் இருபுறமும் கான்கிரீட் கரை கட்ட 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதற்கும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தேனி மாவட்டத்தில் முதல்போக சாகுபடிக்காக முதலமைச்சரின் உத்தரவுப்படி, தண்ணீர் திறந்துவிடப்பட்டு, நெல் நடவு தீவிரமடைந்துள்ளது. நெற்பயிருக்குத் தேவையான DAP, யூரியா, காம்பிளக்ஸ் மற்றும் நுண்ணூட்ட உரங்களும், தரச் சான்றிதழ் பெற்ற விதை நெல்லும் தேவையான அளவில் இருப்பதால், விவசாயிகள் அதனை பயன்படுத்தி, நல்ல முறையில் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் திரு. நா.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல், பல்வேறு சலுகைகளை வழங்கியும், இயந்திரம் மூலம் நடவு செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதால், ஏக்கர் ஒன்றுக்கு 10 மூட்டை வரை நெல் கூடுதலாக கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். தட்டுப்பாடின்றி உரமும், மானிய விலையில் நுண்ணூட்ட உரங்களும் வழங்கிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00