மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சையின்போது தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 23 பேர் முற்றிலுமாக குணமடைய, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தொடர்ந்து உயர்சிகிச்சை : சிகிச்சை செலவு மட்டுமின்றி பாதிக்கப்பட்டோரின் குடும்பச்செலவையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக சட்டப்பேரவையில் அறிவிப்பு

Jul 27 2016 10:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சையின்போது தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 23 பேர் முற்றிலுமாக குணமடைய, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான செலவு மட்டுமின்றி பாதிக்கப்பட்டோரின் குடும்பச்செலவையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், அறுவை சிகிச்சையால் கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, உயர்சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் 2 பேர் முழுமையாக கண்பார்வை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். இதேபோல் மற்றவர்களும் விரைவில் குணமடைவார்கள் என அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் திரு. செம்மலை, கண்புரை அறுவை சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவு மட்டுமின்றி குடும்பச் செலவையும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00