முதலமைச்சர் ஜெயலலிதாவின் தன்னிகரில்லா திட்டங்களால், உயர்கல்வியில் மாணவ, மாணவிகள் சேரும் விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலையில் உள்ளது : உணவு உற்பத்தியில் தொடர்ந்து முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதாகவும் சட்டப்பேரவையில் தகவல்

Jul 27 2016 10:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் தன்னிகரில்லா திட்டங்களால், உயர்கல்வியில் மாணவ, மாணவிகள் சேரும் விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலையில் உள்ளதாகவும், உணவு உற்பத்தியில் தொடர்ந்து முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதாகவும் சட்டப்பேரவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான விவகாரத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆராய அமைக்கப்பட்ட குழுவின் பணிக்காலம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், கடந்த 5 ஆண்டுகளில் 8 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 20 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவில் புதிய தடுப்பணை, குளம், கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் திரு. எடப்பாடி, கே. பழனிச்சாமி தெரிவித்தார்.

புதிய தொழில்கள் தொடங்க விரைந்து அனுமதி அளிக்க ஏதுவாக ஒற்றை சாளர முறையை இந்தியாவிலேயே முதன் முதலில் தமிழகத்தில் 1994-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா என்றும், உலக முதலீட்டாளர் மாநாட்டிற்குப் பிறகு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் ஆய்வு செய்து ஒற்றை சாளர முறையில் 30 நாட்களில் தொழில்தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு வருவதாகவும் பட்ஜெட் விவாதத்தின்போது அமைச்சர் திரு. P. தங்கமணி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில், நத்தம், நிலக்கோட்டை உள்ளிட்ட 3 பேரூராட்சிகளில், ஆயிரத்து 276 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 110 விதியின் கீழ் கூட்டு குடிநீர் திட்டத்தை அறிவித்து, அதற்காக 636 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்டு வரும் தனிச்சிறப்புமிக்க திட்டங்களால், கடந்த 2011 முதல் 2014-ம் வரை தமிழகத்தில் 67 அரசுக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும், முதலமைச்சரின் சிறப்பான கல்வித் திட்டங்களால் இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் விகிதம் 44 புள்ளி 8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

முதலமைச்சரின் சிறப்பான திட்டங்கள் காரணமாக தி.மு.க. ஆட்சியில் 21 லட்சம் லிட்டராக இருந்த பால் உற்பத்தி, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் 31 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளதாக அமைச்சர் திரு. எஸ்.பி. சண்முகநாதன் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வேளாண் உற்பத்தியை பெருக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, தமிழகத்தில் உணவு தானிய உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து 2015-16-ம் ஆண்டு 130 புள்ளி 65 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளதாகவும், வரும் ஆண்டில் இது மேலும் உயரும் என்றும் உணவு தானிய உற்பத்தியில் மத்திய அரசின் கிரிஷ்கர்மான் விருதை 3 முறை தமிழக அரசு பெற்றுள்ளதாகவும் அமைச்சர் திரு. ஆர். துரைக்கண்ணு தெரிவித்தார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்தி வரும் அம்மா திட்டம் மூலம் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும், அம்மா திட்ட முகாம்களில் காலையில் மனு அளித்தால், அன்று மாலைக்குள் தீர்வுகாணப்பட்டு, பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன என்றும் அமைச்சர் திரு. ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00