மத்திய அரசின் சிறந்த நெசவாளருக்கான தேசிய விருது - காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்மணி தேர்வு

Jul 27 2016 9:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண்மணி, சிறந்த நெசவாளருக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெசவாளர்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்திருப்பது தங்களுக்கு பெரிதும் ஊக்கமளிப்பதாக உள்ளது என அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மத்திய கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கான விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த நெசவாளர் விருது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண்மணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பறவையான மயிலின் வடிவம் கொண்டு இவர் நேர்த்தியாக உருவாக்கிய பட்டுச்சேலைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

அடுத்த மாதம் 7-ம்தேதி முதலாவது தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படவிருப்பதால், அன்றைய தினம் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்படவுள்ளது. தமக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், நெசவாளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும்செய்து கொடுத்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைத்துப் பார்ப்பதாகவும் பத்மா பெருமிதத்துடன் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00