முதலமைச்சர் ஜெயலலிதாவின் இடையறாத முயற்சியால், இலங்கை சிறையில் உள்ள 77 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு ஆணை - 43 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சியோர் அடுத்த சில நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என தமிழக அரசு தகவல்

Jul 26 2016 10:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் இடையறாத முயற்சிகளின் பயனாக, இலங்கைச் சிறையில் உள்ள நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 77 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு ஆணையிட்டு, முதல்கட்டமாக நேற்று 43 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படவுள்ளனர்.

நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பாக் வளைகுடா பகுதியினைச் சேர்ந்த மீனவர்கள், தங்களது பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபடும் போது இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்படுகின்றனர்- இவ்வாறு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போது, அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா மேற்கொண்டு வருவதாக இன்று வெளியிடப்பட்ட தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்களுடைய பாரம்பரிய பாக் வளைகுடா மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, கடந்த மே மாதம் 31-ம் தேதி முதல் இம்மாதம் 15-ம் தேதி வரையிலான காலத்தில் 77 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கடந்த மே மாதம் 31-ம் தேதியும், ஜுன் மாதம் 4, 6, 9, 16, 25 ஆகிய தேதிகளிலும், ஜூலை மாதம் 3, 5, 7, 16 ஆகிய தேதிகளிலும் கடிதங்கள் மூலம் தமிழக மீனவர்கள் கைது பற்றிய விவரங்களை பிரதமரின் உடனடி நேரடி கவனத்திற்கு கொண்டு சென்றார்- அக்கடிதங்களில், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் வாடும் 77 அப்பாவி தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்- பிரதமர் நேரடியாக தலையிட்டு அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்தக் கடிதங்களில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் இடையறாத முயற்சிகளின் பயனாக, இலங்கைச் சிறையில் உள்ள நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 77 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு ஆணையிட்டு, முதல்கட்டமாக நேற்று, 43 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00