முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு சங்கங்களில் சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் பெற்ற 5,780 கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி : தமிழகம் முழுவதும் சுமார் 17 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளதாக சட்டப்பேரவையில் தகவல்

Jul 26 2016 10:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 6-வது முறையாக பதவியேற்றவுடன், விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை ரத்து செய்து அறிவித்தார். அதன்படி, மொத்தம் 8 லட்சத்து 35 ஆயிரத்து 360 சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பண்ணை கடன்கள் உட்பட மொத்தம் 5,780 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் மாநிலம் முழுவதும் 16 லட்சத்து 94 ஆயிரத்து 145 விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் தமிழக சட்டப்பேரவையில் இன்று அறிவிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜூ, முதலமைச்சர்செல்வி ஜெயலலிதா, 6-வது முறையாக பதவியேற்றவுடன், சட்டப்பேரவைத் தேர்தலின்போது அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி, சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி உத்தரவில் முதல் கையெழுத்திட்டதாக பெருமிதம் தெரிவித்தார். முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க 5,780 கோடி ரூபாய் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், புள்ளி விவரங்களுடன் அவர் விளக்கமளித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00