பொறியியல் படிப்பு சேர்க்கை : சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது

Jun 25 2016 10:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வின் இரண்டாம் நாளான இன்று, மாற்றுத் திறனாளிகள் பிரிவில் கலந்தாய்வு தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் B.E., B.Tech பொறியியல் படிப்புகளில் சேர, ஒரு லட்சத்து 34 ஆயிரத்து, 722 மாணவ-மாணவியர் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ரேண்டம் எண், மற்றும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் அபூர்வதர்ஷினி என்ற மாணவி முதலிடம் பிடித்தார். விக்னேஷ் 2-வது இடமும், பரதன் 3-வது இடமும் பெற்றனர். 7 மாணவ - மாணவியர் 200-க்கு 200 கட்ஆப் மதிப்பெண்களை பெற்றனர்.

இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று, விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில் 500 இடங்களுக்கு, ஆயிரத்து 188 பேர் அழைக்கப்பட்டனர். முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு இடஒதுக்கீடு ஆணைகளை விளையாட்டுத்துறை அரசு செயலாளர் டாக்டர் ராஜேந்திரகுமார் வழங்கினார். 500 இடங்களில் 352 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள இடங்கள் பொதுக் கலந்தாய்வுக்கு மாற்றப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு இன்று, தொடங்கியுள்ளது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்கி, அடுத்த மாதம் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. கலந்தாய்வுக்கு வரும் மாணவ- மாணவியர்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, போக்குவரத்து, குடிநீர், மருத்துவம் மற்றும் வங்கி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00