இரண்டு மணி நேரத்தில் காசநோய் குறித்த பரிசோதனை முடிவுகளை தெரிவிக்கும் அதிநவீன கருவி - நாகை அரசு மருத்துவமனையில் அறிமுகம்

Jun 25 2016 7:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

காசநோயைக் கண்டறியும் அதிநவீன கருவி, நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித கட்டணமும் இன்றி இதன்மூலம் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்படுவதால், அப்பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொற்று நோய்களில் மிகவும் மோசமானதாகக் கருதப்படும் காசநோயைக் கண்டறிந்து, தொடர் சிகிச்சை அளிப்பதன் மூலம் அதனைக் கட்டுப்படுத்த முடியும். தமிழகம் முழுவதும் இதற்கான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோய் தாக்கியவரின் சளி மாதிரியை சேகரித்து, பரிசோதனைக்காக, சென்னைக்கு அனுப்ப வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்த பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்று, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனைத் தவிர்க்கும் விதமாக, அந்தந்த பகுதிகளிலேயே அதற்கான வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில், "ஜெனி எக்ஸ்பர்ட்" என்ற நவீன கருவி நிறுவப்பட்டுள்ளது.

20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள "ஜெனி எக்ஸ்பர்ட்" கருவியை, முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா ஆணைக்கிணங்க, அமைச்சர் திரு. ஓ.எஸ். மணியன் இயக்கி வைத்தார். இதன்மூலம் எவ்வித கட்டணமுமின்றி, காசநோய் இருப்பதை, 2 மணி நேரத்தில் அறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ளலாம்.

மேலும், முதலமைச்சர் ஆணைக்கிணங்க, காச நோயாளிகளின் வீடு தேடிச் சென்று, மருந்து, மாத்திரைகள் விலையின்றி வழங்கும் பணியும் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு, இரு சக்கர வாகனங்களையும் அமைச்சர் நேற்று வழங்கினார்.

இதனிடையே, சாலை விபத்தில் காயமடைந்து, மயலாடுதுறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அ.இ.அ.தி.மு.க நிர்வாகியை, அமைச்சர் திரு. காமராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, தகுந்த சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்ள மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00