பறவை காய்ச்சல் எதிரொலியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து கோழி மற்றும் அதனை சார்ந்த பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது : கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனரகம் அறிவிப்பு

May 27 2016 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

பறவை காய்ச்சல் எதிரொலியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து கோழி மற்றும் அதனை சார்ந்த பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது என கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில் உள்ள ஹாம்நாத், மோகராகி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பறவை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. பறவை காய்ச்சல் பாதித்த கோழிகளை கண்டறிந்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் அவற்றை தீயிட்டு எரித்து அழித்து வருகின்றனர்.

மேலும், பறவை காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் பரவி வரும் பறவை காய்ச்சல் நோய், தமிழகத்திற்குள் பரவாமல் தடுக்கும் வகையில், தமிழக - கேரள எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் கோவை மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் முகாமிட்டு பறவைக் காய்ச்சல் தடுப்பு மருந்தை தெளித்து வருகின்றனர். கேரளாவில் இருந்து வரும் வாகனங்களின் டயர்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பறவைக் காய்ச்சல் நோய்க் கிருமிகளை அழிக்கும் வகையில், கிருமி நாசினி மருந்தினை தெளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பணியினை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் திரு. ஆபிரகாம் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த தடுப்பு நடவடிக்கைகள் 24 மணிநேரமும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கர்நாடக மாநிலத்தில் இருந்து கோழி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கேரளா மற்றும் ஆந்திராவில் இருந்து கோழிகளை ஏற்றி வரும் வாகனங்களில் உரிய மருத்துவ சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே தமிழகத்தில் அனுமதிக்கப்படுவதாகவும், கோழி பண்ணைகள் அதிகம் உள்ள கோவை, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் கோழிகள் இறந்தால் அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என பண்ணை உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00