பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயணச் சலுகை - ஜுன் முதல் ஆகஸ்ட் வரையிலான 3 மாதங்களுக்கு டோக்கன் வழங்கும் பணி சென்னையில் தொடக்கம்

May 28 2016 5:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்திற்கான டோக்கன்கள் பெற்ற 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஜுன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை 3 மாதங்களுக்கு தலா 10 டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி தொடங்கி வைத்தார். இதனையடுத்து, சென்னையில் உள்ள 60 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு புகைப்பட அடையாள அட்டை மற்றும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை கட்டணமில்லா பயணத்திற்கான டோக்கன்களும் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின்கீழ் டோக்கன் பெற்றவர்களுக்கு தற்போது ஜுன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களுக்கு தலா 10 டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மூத்த குடிமக்கள் குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்பட அடையாள அட்டை ஆகியவற்றை ஏற்கெனவே டோக்கன் பெற்ற மையங்களில் அளித்து புதிய டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம். இதற்காக மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிதாக பயன்பெற விரும்பும் மூத்த குடிமக்கள் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து, குடும்ப அட்டையுடன் தங்கள் இருப்பிடத்தின்அருகாமையில் உள்ள போக்குவரத்து கிளை அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயனடைந்து வரும் மூத்த குடிமக்கள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00