ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, மாணவ-மாணவியரின் பாதுகாப்பு நலன் கருதி தனியார் - அரசு உதவிபெறும் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி தீவிரம்

May 27 2016 6:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, மாணவ-மாணவியரின் பாதுகாப்பு நலன் கருதி, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் முன்பு, மாணாக்கர்களின் பாதுகாப்பு கருதி, அனைத்து பள்ளி வாகனங்களும் சோதனையிடப்பட்டு வருகின்றன. வாகனங்களில் இருக்கை வசதிகள், படிக்கட்டுகள், முதலுதவி வசதிகள் உள்ளிட்டவை சரியாக உள்ளனவா? என ஆய்வு செய்யப்பட்ட பின்னரே, பள்ளி வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் அனுமதி வழங்குகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில், உதவி ஆட்சியர் திரு. அமர்குஷ்வாஹா மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், கல்வித்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர், சிவகாசி வட்டாரப் பகுதிகளில் 83 பள்ளி வாகனங்களை சோதனையிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், 184 தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். வாகனத்தில் வேக கட்டுப்பாட்டு கருவி, முதலுதவிப் பெட்டி, வாகன டயர்களின் தரம், இருக்கைகள், பிரேக், உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

நாகை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக, மயிலாடுதுறையை அடுத்துள்ள மன்னம்பந்தலில், 72 பள்ளிகளைச் சேர்ந்த 232 வாகனங்களில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00