சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கும், வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் நன்றி : வெற்றிபெற்ற கழக வேட்பாளர்களும், வெற்றிவாய்ப்பை இழந்தவர்களும், தங்கள் சட்டமன்றத் தொகுதியின் அனைத்து வாக்காளர்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க, முதலமைச்சர் வேண்டுகோள்

May 27 2016 5:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

சட்டமன்றத் தேர்தலில், தமது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியை வழங்கியுள்ள தமிழக மக்களுக்கும், இந்த வெற்றிக்காக உழைத்த ஒவ்வொருவருக்கும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றிபெற்ற கழக வேட்பாளர்களும், வெற்றிவாய்ப்பை இழந்தவர்களும், தங்கள் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளின் வாக்காளர்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் வியத்தகு வெற்றியை தமிழக மக்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

"மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற கொள்கையை வழிகாட்டும் தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்துவரும் உங்கள் அன்புச் சகோதரியாகிய தமக்கு நீங்கள் வழங்கிவரும் இணையில்லா அன்பிற்கும் பேராதரவிற்கும் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் தமது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கியிருக்கும் இந்த மகத்தான வெற்றிக்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் மீண்டும் தமது நன்றி உரித்தாகுக என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. வேட்பாளராக தேர்தல் களத்தில் போட்டியிட்ட ஒவ்வொருவரும், வாக்காளர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம் - வெற்றிபெற்ற வேட்பாளர்களும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும், தத்தமது சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதி வாக்காளர்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு அளித்ததைப் போல, தொடர் வெற்றியை தமக்கும் அளித்திருக்கும் மக்களுக்கு, கடந்த காலங்களைப் போல, தமது தலைமையிலான புதிய அரசு, அரும்பணிகளைத் தொய்வின்றி ஆற்றும் என்ற உறுதி மொழியையும் இத்தருணத்தில் தெரிவித்து மகிழ்வதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00