உதகை தாவரவியல் பூங்காவில் 120-வது மலர்க் கண்காட்சி நாளை தொடக்கம்

May 26 2016 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

உதகை தாவரவியல் பூங்காவில் 120-வது மலர்க் கண்காட்சி நாளை தொடங்குகிறது. 5 லட்சம் மலர்ச் செடிகளில் பல வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவர, தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அங்குள்ள தாவரவியல் பூங்காவில், 120-வது மலர்க் கண்காட்சி நாளை தொடங்குகிறது. இதனையொட்டி, பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 194 ரகங்களைக் கொண்ட 5 லட்சம் மலர்ச்செடிகளில் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மேலும், 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் பல வகையான வெளிநாட்டு மலர்ச்செடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கார்னேசன் மலர்களால் சிட்டுக்குருவிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது தவிர 20 அரங்குகளில் பல்வேறு வகை மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கக்கூடும் என்பதால், மாவட்ட நிர்வாகமும், தோட்டக்கலையும் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. 120-வது மலர்க்கண்காட்சியை முன்னிட்டு, நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00