மேற்குவங்க மாநில முதலமைச்சராக பதவியேற்கும் மம்தா பானர்ஜிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து : பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்ததற்காக நன்றி - முக்கிய அரசுப் பணிகள் காரணமாக, பதவியேற்பு விழாவில் தம்மால் கலந்துகொள்ள இயலவில்லை என்றும் முதலமைச்சர் விளக்கம்

May 27 2016 5:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்குவங்க மாநில முதலமைச்சராக இன்று பதவியேற்கவுள்ள செல்வி மம்தா பானர்ஜிக்கு, தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு தமக்கு அழைப்பு விடுத்ததற்காக நன்றி தெரிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அரசுப் பணிகள் அதிகமாக உள்ளதால் பதவியேற்பு விழாவில் தம்மால் கலந்துகொள்ள இயலவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, மேற்குவங்க மாநில முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜிக்கு, அனுப்பியுள்ள கடிதத்தில், செல்வி மம்தா பானர்ஜி, முதலமைச்சராக இன்று பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமக்கு அழைப்பு விடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

செல்வி மம்தா பானர்ஜி, தொடர்ந்து 2-வது முறையாக மகத்தான வெற்றி பெற்றிருப்பது கொண்டாடப்பட வேண்டிய சாதனை என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு செல்வி மம்தா பானர்ஜிக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க தாம் விரும்பியபோதிலும், அரசுப் பணிகள் அதிகமாக இருப்பதால், தம்மால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் பணியில், செல்வி மம்தா பானர்ஜியும், அவரது அமைச்சரவை உறுப்பினர்களும், மேலும் பல சாதனைகளை நிகழ்த்த, தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00