பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாணவர்களும், ஆசிரியர்களும் நன்றி

May 26 2016 11:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

கும்பகோணம் கல்வி மாவட்டத்தில், 13 அரசு உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், பத்தாம் வகுப்பு தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளதற்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட கல்வித் திட்ட உதவிகளே காரணம் என்று மாணவர்களும், ஆசிரியர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.

கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 25 அரசு மேல்நிலை பள்ளிகளும், 24 உயர்நிலை பள்ளிகளும் உள்ளன. இவற்றில் 13 பள்ளிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. கும்பகோணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தாராசுரம் மேல்நிலைப் பள்ளி, நீலத்தநல்லூர், ராமானுஜபுரம் உள்ளிட்ட 13 பள்ளிகள் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த சாதனை நிகழ்த்தியுள்ளன. கும்பகோணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 77 மாணவிகளும் வெற்றி பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தியும், பல்வேறு கல்வி திட்டங்களை வழங்கியும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கையால் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளதாக மாணவ, மாணவிகள் நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்தனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஏற்படுத்தி வரும் கல்வி புரட்சிக்கு ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00