பள்ளி மாணாக்கர்களின் பாதுகாப்பு கருதி, தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு - வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சோதனை

May 25 2016 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கவிருப்பதை முன்னிட்டு, மாணாக்கர்களின் பாதுகாப்பு கருதி, தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து, வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்கும் நோக்கில், மாணவ - மாணவியரின் நலன் கருதி, தமிழக அரசு உத்தரவுப்படி, வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றனவா என்பது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோடை விடுமுறைக்குப் பின்னர், வரும் ஜுன் மாதம் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், மாநிலம் முழுவதும் வாகன சோதனையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி திருவெறும்பூரில் மாவட்ட வருவாய் அதிகாரி திரு. ரெங்கராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், திருச்சி கிழக்கு மற்றும் திருவெறும்பூர் பகுதிக்குட்பட்ட 18 பள்ளிகளைச் சேர்ந்த 65 பள்ளி வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கும் 632 பள்ளி வாகனங்களையும், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு ஆய்வு நடத்துகின்றனர். பள்ளி வாகனங்களின் பிரேக், கதவு, இருக்கைகள், வாகனத்தின் தரைதளம், முதலுதவிப்பெட்டி உள்ளிட்டவை நல்ல முறையில் இருக்கிறதா என சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வுப் பணியை மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00