எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்ப விநியோகம் - நாளை முதல் ஜுன் மாதம் 6-ம் தேதிவரை விண்ணப்பங்களை மருத்துவ கல்லூரிகளில் நேரடியாக பெற ஏற்பாடு

May 25 2016 10:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவத்துக்கான பி.டி.எஸ். படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. ஆன்லைன் மூலம் இன்றுமுதல் விண்ணப்பங்களை பதவிறக்கம் செய்து கொள்ளலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ப்ளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானதை அடுத்து, ஏற்கெனவே பொறியியல் மற்றும் அறிவியல் கலைக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து, தற்போது மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவத்துக்கான பி.டி.எஸ். படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் விமலா சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வரும் 6ம் தேதி வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும், சென்னையில் கீழ்ப்பாக்கம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவக் கல்லூரி ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் விண்ணப்ப விநியோகம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் 500 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்படுகின்றன. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கட்டணமின்றி விண்ணப்பங்கள் வழங்கப்படும் - ஆன்லைனில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை இன்றுமுதல் பெற்றுக் கொள்ளலாம் என்றும் மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00