மருத்துவக் கல்லூரிகளில், தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு நடப்பாண்டில் விலக்கு அளிக்கும் வகையில், அவசரச் சட்டம் கொண்டு வந்த பிரதமருக்கு, நன்றி தெரிவித்து முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் : மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு, தமிழக அரசு தற்போது நடைமுறைப்படுத்தி வரும் வெளிப்படையான மற்றும் நியாயமான முறையைத் தொடர்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தல்

May 25 2016 8:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

மருத்துவ படிப்புகளில் சேர, தேசிய "தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை" எதிர்காலத்தில் ரத்துசெய்ய வேண்டும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரதமர் திரு.நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். கிராப்புற எளிய மாணவர்கள் சமஅளவில் பயன்பெறும் வகையில், தமது அரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை புகுத்துவது மாநில அரசுகளின் சமூக, பொருளாதார கொள்கைகளில் மட்டுமின்றி, அதற்கான நோக்கங்களிலும் தலையிடும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவ பட்டப்படிப்பில் சேர, நடப்பு கல்வியாண்டில் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அவசர சட்டம் இயற்றியதற்கும், இதற்காக துரிதமாக செயல்பட்டதற்கும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மன அழுத்தமும் தற்காலிகமாக நீங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கும் என்ற ஆவலும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கிராமப்புற எளிய மாணவ - மாணவிகளின் நலனைக் கருதி, 2005ம் ஆண்டு மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ததை நினைவு கூர்ந்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றதையும் சுட்டிக்காட்டியுள்ளார் - மருத்துவ பொது நுழைவுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்து இயற்றிய சட்டத்தை, சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்ததையும், அதனை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததையும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார் - கிராமப்புற மற்றும் எளிய மாணவ - மாணவியர்கள் மருத்துவக் கல்வி பெற தமது அரசு எடுத்துவரும் நடவடிக்கையை விளக்கமாக எடுத்துரைத்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக, கிராமப்புற மாணவர்கள் நுழைவுத் தேர்வில் பங்கேற்க இயலாது என்பதில் தமது அரசு உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவிலான மருத்துவ தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை புகுத்துவது மாநில அரசின் சமூக மற்றும் பொருளாதாரம் சார்ந்த கொள்கைகளை நிறைவேற்றுவதையும், அதன் நோக்கங்களை அடைவதையும் பயனளிக்காமல் செய்துவிடும் என சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, எதிர்காலத்திலும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் வெளிப்படையான முறையில் மாணவர்களை சேர்க்கும் தமிழக அரசின் நடவடிக்கையை உறுதிபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00