முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட தீவிர முயற்சிகளின் பயனாக இலங்கை சிறையிடலிருந்து விடுவிக்கப்பட்ட 34 தமிழக மீனவர்களும் காரைக்காலுக்கு திரும்பினர் : தாங்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சருக்கு மீனவர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்

May 25 2016 7:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட தீவிர முயற்சிகளின் பயனாக இலங்கை சிறையிடலிருந்து விடுவிக்கப்பட்ட 34 தமிழக மீனவர்களும் காரைக்காலுக்கு திரும்பினர். முதலமைச்சரின் உத்தரவின்பேரில் மீன்வளத்துறை அமைச்சர் திரு. D. ஜெயகுமார், உணவு, உடைகள் மற்றும் பல்வேறு உதவிகளை வழங்கி வரவேற்றார். தாங்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சருக்கு மீனவர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 34 மீனவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்த மீனவர்களை விடுதலை செய்ய முதலமைச்சர் செல்விஜெ ஜெயலலிதா, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதை அடுத்து, தமிழக மீனவர்கள் 34 பேரை இலங்கை அரசு விடுதலை செய்தது. இலங்கையில் உள்ள மன்னார் மற்றும் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில், மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் நேற்று காரைக்கால் துறைமுகத்திற்கு வந்தடைந்தனர். அவர்களை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, மீன்வளத்துறை அமைச்சர் திரு. D. ஜெயக்குமார், உணவு மற்றும் உடைகள் வழங்கி வரவேற்றார்.

இலங்கை சிறையில் வாடிய தங்களை மீட்டு, தாயகம் திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு மீனவர்களும், உறவினர்களும், மீனவ சமுதாய மக்களும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00